ETV Bharat / sitara

ஜெயம் ரவியின் 'பூமி' வெளியாகும் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ’பூமி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் படம் வெளியாகும் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

jayam ravi
jayam ravi
author img

By

Published : Jan 16, 2020, 9:55 PM IST

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'டிக் டிக் டிக்', 'அடங்கமறு' ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இவர் நடித்து, 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையையும் மனிதர்கள் மறந்த மனிதத்தையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்த 'கோமாளி' படம் கடந்தாண்டு ஆகஸ்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில், ஹாட்ரிக் ஹிட் கொடுத்த குஷியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது ஜெயம் ரவியின் 25ஆவது படமாகும். இந்த படத்தை ஜெயம் ரவியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மண் இயக்குகிறார்.

அகில உலக பிரச்னையாக கருதப்படும் விவசாயத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு 'பூமி' என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக தெலுங்கு நடிகை நீத்தி அகர்வால் நடிக்கிறார். காமெடியனாக சதீஷ் நடிக்கிறார். இசை - டி. இமான். தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட படக்குழு தற்போது செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவத்துள்ளனர்.

Intro:Body:

Boomi Movie

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.