சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா கரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' கரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பன் டாக்டர் நடேசனின் நேரிடை கண்காணிப்பில் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இன்று இல்லம் திரும்பிவிட்டேன்.
நடேசனுக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த ஏனைய மருத்துவர்கள், செவிலியர் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள், என் உடல் நிலை குறித்து தொடர்ந்து தொலைபேசி, சமூக ஊடகங்கள் வாயிலாக நலம் விசாரித்த நண்பர்கள், இயக்குநர்கள் , திரைத்துறை நண்பர்கள், உறவுகள், அரசியல் பெருமக்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்து, பொதுவெளியில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
இதையும் படிங்க: கை கூடுமா, சூரியன் சுடுமா? சூடுபிடிக்கும் மலைக்கோட்டை தேர்தல் அரசியல் களம்!