கடந்த 18ஆண்டுகளாக புனேவில் அமைந்துள்ள எம்ஐடி உலக அமைதி பல்கலைக்கழகமானது (MIT World Peace University) சிறந்த ஆளுமைகளுக்கு 'பாரத் அஷ்மிதா' விருதை வழங்கி வருகிறது.
இந்த விருதானது இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஐந்து ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு, திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக இயக்குநர் மணிரத்னத்துக்கும், பின்னணிப் பாடல் பங்களிப்புக்காக சங்கர் மகாதேவனுக்கும் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருதானது பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஆகியவற்றுடன் சேர்ந்து தலா 1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
விருது வழங்கும் விழாவானது வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ளது.
தற்போது மணிரத்னம் மிகப்பெரும் இந்திய நட்சத்திர பட்டாளங்களைக் கொண்டு ’பொன்னியின் செல்வன்’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'காத்து வாக்குல ரெண்டு காதல்' டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!