ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ’க பெ ரணசிங்கம்’. அறிமுக இயக்குநர் விருமாண்டி, இந்தப் படத்தை இயக்கிவருகிறார். இதில் ஜி.வி. பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ, வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிஸியான ஹீரோவாகிவிட்ட விஜய் சேதுபதி, அவ்வப்போது நட்பு அடிப்படையில் சில படங்களில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அப்படித்தான் இந்தப் படத்திலும் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷை மைய கதாபாத்திரமாகக் கொண்டு இதன் கதை நகர்கிறது.
-
Saw #KaPaeRanaSingam and started working on the BG Score for the movie. After #Aramm, this is one of the very important movies in Tamil Cinema and I'm really happy n proud to be a part of it... brilliant performances by @aishu_dil n @VijaySethuOffl …@kjr_studios @pkvirumandi1 pic.twitter.com/QHNLlQify0
— Ghibran (@GhibranOfficial) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Saw #KaPaeRanaSingam and started working on the BG Score for the movie. After #Aramm, this is one of the very important movies in Tamil Cinema and I'm really happy n proud to be a part of it... brilliant performances by @aishu_dil n @VijaySethuOffl …@kjr_studios @pkvirumandi1 pic.twitter.com/QHNLlQify0
— Ghibran (@GhibranOfficial) May 10, 2020Saw #KaPaeRanaSingam and started working on the BG Score for the movie. After #Aramm, this is one of the very important movies in Tamil Cinema and I'm really happy n proud to be a part of it... brilliant performances by @aishu_dil n @VijaySethuOffl …@kjr_studios @pkvirumandi1 pic.twitter.com/QHNLlQify0
— Ghibran (@GhibranOfficial) May 10, 2020
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தற்போது கரோனா தொற்று காரணமாக, இதன் பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது இப்படம் குறித்து படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், " 'க பெ ரணசிங்கம்' படத்துக்கான பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அறம் படத்திற்குப் பின் இந்த படம் முக்கியப் படமாக தமிழ் சினிமாவில் இருக்கும். இதன் ஒருபகுதியாக நான் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாகவும் அற்புதமான நிகழ்வாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.