ETV Bharat / sitara

'பீஸ்ட்' ஸ்பெஷல் போஸ்டர் நாளை வெளியீடு? - Beast latest update

பீஸ்ட் திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் நாளை வெளியிடப்படவுள்ளதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்களள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

'பீஸ்ட்' ஸ்பெஷல் போஸ்டர் நாளை வெளியீடு?
'பீஸ்ட்' ஸ்பெஷல் போஸ்டர் நாளை வெளியீடு?
author img

By

Published : Dec 18, 2021, 7:05 PM IST

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து திரைப்படத்தின் போஸ்ட் தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

நேற்று (டிசம்பர் 17) நடைபெற்ற பீஸ்ட் புரமோ பாடலின் படப்பிடிப்பில் விஜய், நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த புரமோ பாடல் புத்தாண்டு தினத்தில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை (டிசம்பர் 18) ‘பீஸ்ட்’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை மாலை 5 மணிக்கு சன் பிக்சர்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியீடு குறித்த தகவலுடன், ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: புதிய தோற்றத்தில் விஜய்சேதுபதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.