நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்றது.
இதில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் படத்தின் பேட்ச் ஒர்க் பணிகள் மட்டும் ஜெய்ப்பூரில் நடந்துவந்தன.
இந்நிலையில் தற்போது அந்தப் பணிகளும் முடிவடைந்து படக்குழு சென்னை திரும்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் விரைவில் இறுதிக்கட்ட பணிகளை முடிக்க படக்குழு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இதையும் படிங்க: நூறு கோடி வானவில் மோஷன் போஸ்டர் வெளியீடு