ஈகா என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக 'பிக்பாஸ்' புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார். ஜி மதன் படத்தைத் தொகுக்க, சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதிஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'லிஃப்ட்' படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி வினித் வர பிரசாத் இயக்கியுள்ளார். பாடலாசிரியர் ஆர். நிஷாந்த் எழுதிய 'இன்னா மயிலு' பாடலை நடிகர் சிவகார்த்திகேயன், பிகில், மாஸ்டர் பட புகழ் பூவையார் இணைந்து பாடியுள்ளனர்.
-
#Lift is a superb watch 👏👏👏 very well done team 💐way to go @Kavin_m_0431 🤗 @VineethVarapra1 @Actor_Amritha @DopYuva 👏👏 pic.twitter.com/RyTcftX154
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) October 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Lift is a superb watch 👏👏👏 very well done team 💐way to go @Kavin_m_0431 🤗 @VineethVarapra1 @Actor_Amritha @DopYuva 👏👏 pic.twitter.com/RyTcftX154
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) October 5, 2021#Lift is a superb watch 👏👏👏 very well done team 💐way to go @Kavin_m_0431 🤗 @VineethVarapra1 @Actor_Amritha @DopYuva 👏👏 pic.twitter.com/RyTcftX154
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) October 5, 2021
இந்த பாடல் சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஐடி பணியாளர்களின் மன அழுத்தம் மற்றும் பிரச்சினைகளை திகில் கலந்து சொல்லியிருக்கும் இப்படம் சமீபத்தில் டிஸ்பி +ஹாட் ஸ்டாரில் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்று வரும் லிஃப்ட் திரைப்படத்தை பார்த்த பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " 'லிஃப்ட்' அருமையான படம். நன்றாக உள்ளது. கவின், அம்ரிதா, வினீத் அனைவருக்கும் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கவினின் லிஃப்ட் பட வெளியீட்டில் ஏற்பட்ட புதிய சிக்கல்