- ராயல் ஆல்பர்ட் ஹாலில் நேற்று முன் தினம் (ஏப்.11) இரவு நடைபெற்ற 74ஆவது பிரிட்டிஷ் அகாடமி ஃபார் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) விருதுகளில் பிரான்சஸ் மெக்டார்மண்ட் நடிப்பில் வெளியான 'நோமட்லேண்ட்' (Nomadland) நான்கு விருதுகளை வென்றுள்ளது.
- 83 வயதான பழம்பெரும் நடிகரான ஆந்தோனி ஹாப்கின்ஸ் ’தி ஃபாதர்’ (The Father) திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
- ராமின் பஹ்ரானி இயக்கத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ’தி ஒயிட் டைகர்’ (The White Tiger) சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை பிரிவில் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ’தி ஃபாதர்’ படத்திடம் விருதை நழுவ விட்டது.
- நகைச்சுவை திரில்லரான ’பிராமிஸிங் யங் வுமன்’ (Promising Young Woman) திரைப்படம் இரண்டு விருதுகளையும், அனிமேஷன் படமான ’சோல்’ சிறந்த அனிமேஷன் மற்றும் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவுகளில் விருதுகளையும் வென்றது.
- ’நோமட்லேண்ட்’ சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை (பிரான்சிஸ் மெக்டார்மண்ட்), சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றது.
- ’ஜூடாஸ் அண்ட் த பிளாக் மேசியா’ (Judas And The Black Messiah) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் டேனியல் கலுயா வென்றார்.கொரிய நடிகை யு-ஜங் யங், ’மினாரி’ (Minari) படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். இந்த விருதைப் பெற்ற அவர், இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
- எழுத்தாளர்-இயக்குநர் ரெமி வீக்கஸ் சிறந்த அறிமுக பிரிட்டிஷ் எழுத்தாளர், இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் பிரிவில் தனது திகில் திரில்லர் படமான ’ஹிஸ் ஹவுஸ்’ (His House) க்காக வென்றார்.
- தாமஸ் வின்டர்பெர்க் இயக்கிய டேனிஷ் திரைப்படமான ’அனதர் ரவுண்ட்’ (Another Round) ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி படத்திற்கான விருதை வென்றது.
- சிறந்த ஆவணப்படத்துக்கான விருது ’மை ஆக்டோபஸ் டீச்சர்’ (My Octopus Teacher) படத்திற்கு வழங்கப்பட்டது
- இந்த ஆண்டு பாஃப்டா விருதுகளை தொகுத்து வழங்கியவர்களில் நடிகை பிரியங்கா சோப்ராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஃப்டா விழாவில் இர்ஃபான் கான், ரிஷி கபூர்!