ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேச்சுலர்'. சதீஷ் செல்வகுமார் இயக்கிய இப்படத்தில் நாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார்.
இதில் முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
காதலர் தின ஸ்பெஷலாக வெளியான இப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இளைஞரின் வாழ்க்கையில், ஒரு பெண் நடுவில் வர அதனால் அவரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றம் குறித்து, இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இதரபணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே 'அடியே' பாடல் நாளை (செப் 30) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்...?