மறைந்த மலையாள இயக்குநர் சச்சி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அய்யப்பனும் கோஷியும்'.
முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து உருவான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருந்தது, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தில் நஞ்சம்மாள் பாட்டி பாடிய 'கலக்காத்தா சந்தனம் மேரா வெகு வேகா பூத்திருக்கு, பூப்பறிக்க போகிலாமோ' பாடல் கேரளாவைத் தாண்டி பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
'அய்யப்பனும் கோஷியும்' மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தற்போது தெலுங்கில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
திரிவிக்ரம் இயக்கும் இப்படத்தில் காவலராக பவன் கல்யாணும், முன்னாள் ராணுவ வீரராக ராணா டகுபதியும் நடிக்கின்றனர். சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
-
Gear up for the Biggest Battle of Self-Esteem, #ProductionNo12 in theatres 12 Jan 2022 ⭐🔥
— Sithara Entertainments (@SitharaEnts) August 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Be ready to experience the FIRST SINGLE veryy soonnn 🎶
Power Star @PawanKalyan @RanaDaggubati #Trivikram @MusicThaman @MenenNithya @saagar_chandrak @vamsi84 @NavinNooli pic.twitter.com/nOfZZiLs5e
">Gear up for the Biggest Battle of Self-Esteem, #ProductionNo12 in theatres 12 Jan 2022 ⭐🔥
— Sithara Entertainments (@SitharaEnts) August 2, 2021
Be ready to experience the FIRST SINGLE veryy soonnn 🎶
Power Star @PawanKalyan @RanaDaggubati #Trivikram @MusicThaman @MenenNithya @saagar_chandrak @vamsi84 @NavinNooli pic.twitter.com/nOfZZiLs5eGear up for the Biggest Battle of Self-Esteem, #ProductionNo12 in theatres 12 Jan 2022 ⭐🔥
— Sithara Entertainments (@SitharaEnts) August 2, 2021
Be ready to experience the FIRST SINGLE veryy soonnn 🎶
Power Star @PawanKalyan @RanaDaggubati #Trivikram @MusicThaman @MenenNithya @saagar_chandrak @vamsi84 @NavinNooli pic.twitter.com/nOfZZiLs5e
தற்காலிகமாக இப்படத்திற்கு "#புரொடக்ஷன் 12" என தலைப்பிடப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது.
"பீமிலா நாயக்" என்ற காவலர் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். தொடர்ந்து இப்படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பவன் கல்யாணின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கலை குறிவைக்கும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்!