ETV Bharat / sitara

ஹாங்காங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் மார்வெல்லின் சூப்பர் ஹீரோக்கள் படங்கள்! - ரீ-ரிலீஸ் ஆகும் பேட்மேன்

ஹாங்காங்: கரோனா ஊரடங்கிலிருந்து ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவைக்கும் விதமாக மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் 'அவெஞ்சர்ஸ்', 'அயன் மேன் 3' திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.

marvel
marvel
author img

By

Published : May 28, 2020, 2:00 PM IST

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இந்த ஊரடங்கை ஹாங்காங் அரசு எச்சரிக்கையுடன் தளர்த்தி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள திரையரங்குகளை சில நிபந்தனைகளுடன் திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சூப்பர் ஹீரோ படமான 'அவெஞ்சர்ஸ்', 'அயன் மேன் 3' ஆகிய திரைப்படங்களை ஹாங்காங் திரையரங்குகளில் மே 28 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை மீண்டும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த இரண்டு படங்களை முதலில் வெளியிடுகிறது. பின்னாளில் மற்ற படங்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹாங்காங், தைவானில் கிறிஸ்டோபர் நோலனின் படைப்பான 'பேட்மேன்' சீரிஸ் படங்களை திரையிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் சீனாவில் மார்வெல்லின் 'அவெஞ்சர்ஸ்' சீரியஸின் அனைத்து படங்களும் திரையிடப்பட உள்ளது. அதேபோல் ஜேம்ஸ் கேமரூனின் அவதார், கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன்', 'இன்டர்ஸ்டெல்லர்' உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.

இதையும் படிங்க: ஹாங்காங்கில் மீண்டும் வெளியாகும் 'பேட்மேன்' சீரியஸ் படங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.