‘அவஞ்சர்ஸ் என்கேம்’ படம் வெளியான முதல் வாரத்திலேயே 157 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வெள்ளிக் கிழமை ரூ 53.10 கோடி, சனிக்கிழமை ரூ 51.40 கோடி, ஞாயிற்றுக் கிழமை ரூ 52.70, மொத்தம் 157. 20 கோடி. இது நம்ப முடியாதது.’ என டுவீட் செய்துள்ளார்.
மேலும் கடந்த வருடம் வெளியான ‘அவஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ திரைப்படம் 2, 000 திரையரங்குகளில் வெளியான முதல் வாரத்தில் ரூ 94.30 கோடி வருமானம் ஈட்டியது. அதேபோல் ‘அவஞ்சர்ஸ் என்ட்கேம்’ திரைப்படம் 2,845 திரையரங்குகளில் வெளியான முதல் வாரத்தில் 157.20 ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.