தமிழில் ஆர்யா - நயன்தாரா நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. இப்படத்தைத் தொடர்ந்து இவர் விஜயை வைத்து 'தெறி', 'மெர்சல்' படங்களை இயக்கினார்.
மூன்றாவதாக விஜயை வைத்து 'பிகில்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2019ஆம் ஆண்டு ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியானது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்தது. பெண்கள் கால்பந்து அணியை மையமாகவைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் வர்ஷா பொல்லம்னா, அமிர்தா அய்யர், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மெர்சல் படத்திற்குப் பின் அட்லீயுடன் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டாவது முறையாக இப்படத்தில் பணியாற்றினார். அதுமட்டுமல்லாது சிங்கப்பெண்ணே பாடலிலும் தோன்றினார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தற்போது அட்லீ படப்பிடிப்பின்போது ஏ.ஆர். ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளப்பக்கதில் வைரலாகிவருகிறது.
அதுமட்டுமல்லாது தான் இயக்கும் அடுத்த படத்திலும் இசைப்புயல் பணியாற்றுவதை அட்லீ இப்படி மறைமுகமாக கூறுகிறாரா எனவும் விவாதம் நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: '43,823 மணிநேரங்கள் உன்னோடு!' - காதல் மனைவிக்கு அட்லீ கூறிய வாழ்த்து