'இவன் தந்திரன்', 'பூமராங்' ஆகிய படங்களை இயக்கிய கண்ணன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, முழுக்க முழுக்க காதல், நகைச்சுவையுடன் கூடிய 'தள்ளிப் போகாதே' என்ற அழகான குடும்ப படத்தினை இயக்கியுள்ளார். இதில் நடிகர் அதர்வா முரளி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அமிதாஷ், ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டப்பிங் பணிகள் முதல் அனைத்து கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது படத்தின் விளம்பர முன்னோட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள், வசனத்தை எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: மைனஸ் 6 டிகிரி குளிரில் அதர்வா - 'பிரேமம்' மேரி