கோவாவில் 51ஆவது சர்வதேச திரைப்பட விழா கடந்தாண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை நடைபெற இருந்தது. ஆனால், கரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 51ஆவது சர்வதேச திரைப்பட விழா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 முதல் 24ஆம் தேதிவரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவத்திருந்தார்.
![goa film](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-goa-film-festival-script-7205221_25012021160139_2501f_1611570699_775.jpg)
இதில் இந்தியன் பனோரமா பிரிவில் தமிழ்நாட்டிலிருந்து 'அசுரன்' திரைப்படமும் 'தேன்' திரைப்படமும் திரையிடப்பட்டன. இதில் படக்குழுவினர் சார்பில் கென் கருணாஸ் பங்கேற்றார்.