நான்காவது முறையாக இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் 'அசுரன்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். வி. கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் இசையாமைப்பாளர் ஜி.வி. பிராகஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
Started the #BGScore #rerecording for #asuran ... 🔥🔥🔥 releasing October 4th ... @dhanushkraja @VetriMaaran @theVcreations
— G.V.Prakash Kumar (@gvprakash) August 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Started the #BGScore #rerecording for #asuran ... 🔥🔥🔥 releasing October 4th ... @dhanushkraja @VetriMaaran @theVcreations
— G.V.Prakash Kumar (@gvprakash) August 11, 2019Started the #BGScore #rerecording for #asuran ... 🔥🔥🔥 releasing October 4th ... @dhanushkraja @VetriMaaran @theVcreations
— G.V.Prakash Kumar (@gvprakash) August 11, 2019
அதில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்படத்துக்கு பின்னணி இசையமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார். மேலும் பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல்,உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.