ETV Bharat / sitara

நான் யாருன்னு எல்லோருக்கும் நிரூபிக்கிற நேரம் இது - 'சார்பட்டா' ஆர்யாவின் பஞ்ச்

author img

By

Published : Jul 13, 2021, 12:58 PM IST

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Sarpatta
Sarpatta

இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பசுபதி, கலையரசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக ஆர்யா உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலைக் கட்டுமஸ்தாக மாற்றினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. சந்தோஷ் சிவன் இசையமைக்கும் இந்தப்படத்தை கே9 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலையின் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை அடுத்து, தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன வண்ணம் இருந்தது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை அதிக விலைகொடுத்து முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் சமீபத்தில் வாங்கியது.

தொடர்ந்து இப்படம் அமேசான் பிரைமில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரெய்லரில், 'பாக்ஸிங் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்த', 'நான் யாருன்னு எல்லாருக்கும் நிரூபிக்கிற நேரம் இது' என காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு உள்ளது.

வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் ட்விட்டரில் #SarpattaParambarai என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விரைவில் களத்தில் சந்திப்போம் - 'சார்பட்டா பரம்பரை' அப்டேட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.