தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்க, இயக்குநர்கள் சிலர் போட்டோபோட்டி போட்டு வருகின்றனர்.
அதில் இயக்குநர் ஏ.எல். விஜய், பாலிவுட் நடிகையான கங்கனாவை வைத்து ஜெயலலிதா வாழ்க்கையைப் படமாக எடுத்து வருகிறார். இப்படத்துக்கு 'தலைவி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் கங்கனாவுடன் நடிகர் அரவிந்த்சாமி நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. தற்போது எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமி, அப்பாத்திரத்துக்காக தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். படத்துக்காக கிளீன் ஷேவ் தோற்றத்துடன் காணப்பட்ட அரவிந்த் சாமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: SAG 2019 - ராபர்ட் டி நீரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!