கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை வதைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் வகையில் டெல்லியில் சிலர் போஸ்டர் ஒட்டினர்.
அந்தப் போஸ்டரில், "எங்கள் குழந்தைகளுக்காக வைத்திருந்த தடுப்பூசியை ஏன் வெளிநாட்டுக்கு அனுப்பினீர்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தனர். இதனை தொடர்ந்து சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசை விமர்சனம் செய்யும் வகையில் ட்விட்டரில் வெளியான பதிவுகளை கூட மத்திய அரசு நீக்கியது. இந்த கைது சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி என்னையும் கைது செய்யுங்கள் (Arrest Me too) என ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலரும் #ArrestMetoo என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் நடிகை ஓவியாவும் தன் பங்குக்கு ட்வீட் செய்திருக்கிறார். அதில், "Is this democracy or democrazy ??? ( இது ஜனநாயகமா அல்லது ஜனநாயகப் பைத்தியக்காரத்தனமா) #ArrestMeToo" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு பலரும் எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
-
Is this democracy or democrazy ???#ArrestMeToo
— Oviyaa (@OviyaaSweetz) May 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Is this democracy or democrazy ???#ArrestMeToo
— Oviyaa (@OviyaaSweetz) May 16, 2021Is this democracy or democrazy ???#ArrestMeToo
— Oviyaa (@OviyaaSweetz) May 16, 2021
இதையும் படிங்க: நடிகர் நிதிஷ் வீரா கரோனா தொற்றால் காலமானார்