இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் '99 சாங்ஸ்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். அவரே கதை எழுதி, தயாரிக்கும் இப்படத்தை கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இதில் ஹீரோவாக காஷ்மீரை சேந்த இஹான் பட் நடிக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது, அதில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ''ஒரு படத்திற்கு இசையமைக்கும் போது, இயக்குநர், பாடலாசிரியர் எல்லாரும் இருப்பாங்க. அப்போது நிறைய டிஸ்கஷன்ஸ் நடக்கும். பெரும்பாலும் எழுத்தாளருக்கும், இயக்குநருக்கும் நிறைய விவாதங்கள் வரும். அந்த விஷயம் இங்கேயும் நடந்தது. இந்தப் படத்துல அறிமுகப்படுத்தியிருக்கிற டால்பீ அட்மாஸ் மியூசிக் டெக்னாலஜி, கண்டிப்பா ரசிகர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தை தரும்.
இந்தப் படத்துல வரக்கூடிய ஒவ்வொரு பாடலின் ட்யூனுக்கும் கிட்டத்தட்ட நாலு வெர்ஷன் போட்டோம். இந்த மாதிரி நிறைய மாற்றங்களுக்குப் பிறகு தான் கதையும், பாடல்களும் ஃபைனல் ஆச்சு. என்னுடைய இசைப் பயணத்துல, இந்தப் படம் சவாலா இருந்தது மட்டுமில்லாமல், ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்தியது'' என்றார்.
இதையும் படிங்க: '40வயது தாண்டிய நடிகைகளுக்கு வாய்ப்புக்கு கிடைப்பதில்லை'- ரவீனா டாண்டன், கரீனா கபூர்