அர்னால்டின் மகள் கேத்ரைன், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. உங்களை மிகவும் நேசிக்கிறேன்; உங்களை கொண்டாட இனியும் காத்திருக்க முடியாது. இந்த நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமையட்டும் என சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதேபோல் அர்னால்டின் மகன் ஜோசப் பெய்னா தனது இன்ஸ்டா பக்கத்தில், அர்னால்டு உடன் ட்ரிங்ஸ் அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அர்னால்டு மகனும் நடிகருமான பேட்ரிக், அர்னால்டு பளுதூக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு. நீங்கள் தாத்தா ஆகிவிட்டதை நம்ப முடியவில்லை அப்பா. உங்கள் வயதில் எனக்கு உங்களுடைய உடல் பலம், மன பலத்தில் பாதியாவது இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓடிடியில் 'ப்ளாக் விடோ': டிஸ்னி மீது வழக்கு தொடர்ந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன்