ETV Bharat / sitara

'பிகில் 50ஆவது நாள் கொண்டாட்டம்' - அர்ச்சனா ட்வீட்! - தளபதி

விஜய் நடிப்பில் உருவான 'பிகில்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Archana kalpathi tweets about bigil 50th day

author img

By

Published : Dec 13, 2019, 6:24 PM IST

‘தெறி', 'மெர்சல்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் உருவான திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிய இத்திரைப்படம், தீபாவளியையொட்டி திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் உருவான இப்படம், இதுவரை உலக அளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

விஜய் திரைப்படங்களில் மட்டுமல்லாமல், உலக அளவில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையையும் 'பிகில்' படைத்துள்ளது. இன்றோடு 'பிகில்' வெளியாகி 50 நாட்கள் நிறைவடைகிறது.

  • As Bigil completes 50 days at the box office to become the highest grossing Tamil movie of the year across the world we would like to thank each every one of you who loved the film and watched it in theaters near you 🙏😊😊 #TeamBigil

    — Archana Kalpathi (@archanakalpathi) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிகில் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 50ஆவது நாளை எட்டிய நிலையில், உலக அளவில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் படத்தை நேசித்து திரையரங்கம் சென்று பார்த்த அத்தனை ரசிகர்களுக்கும் நன்றி' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘தளபதி 64’ படத்துக்காக கர்நாடகாவின் ஷிமோக்காவில் முகாமிட்டுள்ள விஜய்!

Intro:Body:

bigil 50th days

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.