சென்னை: ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ராஜ பீமா படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
சுரபி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நரேஷ் சம்பத் இயக்கி வரும் படம் ராஜ பீமா. பிக் பாஸ் வெற்றியாளர் ஆரவ் - அஷிமா நர்வால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் நாசர், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஷாயாஜி ஷிண்டே, 'பாகுபலி' பிரபாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து படம் குறித்து இயக்குநர் நரேஷ் சம்பத் கூறியதாவது:
'ராஜ பீமா' படக்குழு சார்பில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம். இந்த விழா எங்கள் படத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான், எங்கள் படத்தில் மிகமுக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். உலகமே முடக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கக் கேட்டுக்கொள்கிறோம். விரைவில் நம் வாழ்வு பழையபடியே திரும்பும் என நம்புகிறோம்.
தற்போது 'ராஜ பீமா' படத்தின் 95 விழுக்காடு போஸ்ட் புரொடக்ஷன் முடித்துவிட்டோம். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விரைவில் முடித்துவிடுவோம். திரையரங்குகள் மீண்டும் இயங்க தொடங்கியவுடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: குழந்தைகள் யாரிடம் வளரப் போகிறார்கள்? ஹாலிவுட் முன்னாள் நட்சத்திரத் தம்பதியிடையே வெடிக்கும் மோதல்!