லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம், 'நெற்றிக்கண்'. ’அவள்’ பட இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கிய இந்தப் படம் ‘பிளையண்ட்’ என்ற கொரிய மொழி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.
ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். ’கோ’ பட பிரபலம் அஜ்மல் வில்லனாக நடித்திருந்த இப்படத்தில், நயன்தாரா கண் பார்வை இல்லாதவராக நடித்து அசத்தியுள்ளார். 'நெற்றிக்கண்' படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், நயன்தாரா நடிப்பு ரசிகர்களை வழக்கம் போல் கவர்ந்துள்ளது.
![அனுஷ்கா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12805501_netrikan.jpg)
இந்நிலையில், 'நெற்றிக்கண்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஓராண்டு காலமாக எந்தப் படத்திலும் நடிக்க அனுஷ்கா சம்மதம் தெரிவிக்கவில்லை.
நடிகை அனுஷ்கா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'சைலன்ஸ்' படத்தில் அவர் காது கேளாத, வாய் பேச முடியாதவராக நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட 'சார்பட்டா' டான்சிங் ரோஸ்