இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் 'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பாகமதி' படத்திற்கு பின் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.
தற்போது அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவர் நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்டரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்து. ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்த படம் கரோனா அச்சம் காரணமாக வெளியாகவில்லை.
இதனையடுத்து இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் குறித்து அனுஷ்கா ஷெட்டி கூறுகையில், "நான் இதுவரை நடித்த மற்ற கதாபாத்திரத்துடன் ஒப்பிடும்போது சாக்ஷி எனக்கு மிகவும் புதிய கதாபாத்திரம்.
எனக்கு வசதியான கதாபாத்திரத்தில் நடிப்பதிலிருந்து என்னை வெளியேகொண்டுவந்தது இந்த படம். இந்த கதாபாத்திரம் என்னைத் தேடி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மாதவனுடன் மீண்டும் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவரது நடிப்பிற்கு எப்போதுமே நான் ஒரு அபிமானி" என்றார்.
மாதவன் கூறுகையில், "நான், த்ரில்லர் படங்களில் ஒரு பகுதியாக இருப்பதையும் அதைபார்ப்பதையும் ரசிக்கிறேன். நிசப்தம் நிச்சயமாக நான் நடித்திருப்பதில் சுவாரஸ்யமான ஒன்றாகும், சியாட்டில் மற்றும் அமெரிக்காவின் பிற பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்த கதை உலகளாவிய பார்வையாளர்களையும் தொடர்புபடுத்தும் விதமாகஇருக்கும்" என்றார்.
'சாக்ஷி' எனக்கு மிகவும் புதிய கதாபாத்திரம் - 'நிசப்தம்'அனுஷ்கா
சென்னை: மற்ற கதாபாத்திரத்துடன் ஒப்பிடும்போது சாக்ஷி எனக்கு மிகவும் புதிய கதாபாத்திரம் என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.