இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் 'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பாகமதி' படத்திற்கு பின் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.
தற்போது அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்ட்ரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஓவியர் சாக்ஷி கதாபாத்திரத்தில் அனுஷ்காவும் மாதவன் ஆண்டனி என்னும் பிரபல இசைக்கலைஞர், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் டீஸர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்தது.
-
#NishabdhamTeaser #Nishabdham #Silence pic.twitter.com/tR3Nm9g4bU
— Nishabdham Movie (@nishabdham) November 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#NishabdhamTeaser #Nishabdham #Silence pic.twitter.com/tR3Nm9g4bU
— Nishabdham Movie (@nishabdham) November 4, 2019#NishabdhamTeaser #Nishabdham #Silence pic.twitter.com/tR3Nm9g4bU
— Nishabdham Movie (@nishabdham) November 4, 2019
அதில் அனுஷ்காவின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்தது. ஆனால் தற்போது படத்தின் டீஸரை நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இதையும் வாசிங்க: ஆக்ரேஷமாக வாள் பிடித்த கைகளில் 'நிசப்தம்' ஆக பிரஷ் பிடித்த ஓவியர் அனுஷ்கா!