அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், விஜய் சேதுபதி, டாப்ஸியை வைத்து இயக்கியிருக்கும் படம் 'அனபெல் சேதுபதி'. இப்படத்தில் ராதிகா, யோகிபாபு, ஜெகதிபாபு, வெண்ணிலா கிஷோர், சுப்பு பஞ்சு, மதுமிதா, சுரேஷ் மேனன், தேவதர்ஷினி, சுரேகாவாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில், சுதன் தயாரிக்கிறார். ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜெய்பூரில் நிறைவுபெற்றது.
![Vijay Sethupathi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12880672_vj1.jpg)
கெளதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் கிஷோர் இசையமைத்துள்ளார். போன ஜென்மத்தைக் கிளறும் பீரியட் கால ஃப்ளாஷ் பேக் படமாக உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி ராஜாவாக நடிக்கிறார்.
'அனபெல் சேதுபதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 26) மாலை வெளியாகிறது. மேலும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
-
#AnnabelleSethupathi first look today at 5pm.
— VijaySethupathi (@VijaySethuOffl) August 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#AnnabelleSethupathi first look today at 5pm.
— VijaySethupathi (@VijaySethuOffl) August 26, 2021#AnnabelleSethupathi first look today at 5pm.
— VijaySethupathi (@VijaySethuOffl) August 26, 2021
தீபக் சுந்தர்ராஜன், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனின் மகன் ஆவார். மேலும் இவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான 'தலைவா', 'சைவம்', 'தாண்டவம்' உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: சர்ச்சை இயக்குநர்களின் புதிய வெப் சீரிஸ்: கைகோர்த்த மக்கள் செல்வன்!