மனிதகுல வரலாற்றில் பல ஆண்டுகளாக மனிதர்களுக்கு தோழனாக நாய் இருந்து வருகிறது. வீட்டின் பாதுகாவலனாக இருக்கும் நாய் அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கும். நாயுடான மனிதனின் இந்த அழகிய உறவை அட்டகாசமாக சொல்லியிருக்கிறது, “அன்புள்ள கில்லி” திரைப்பட ட்ரெய்லர்.
ராமலிங்கம் ஶ்ரீநாத் இயக்கத்தில் மைத்ரேயா, சாந்தினி, மைம் கோபி, இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'அன்புள்ள கில்லி'. இப்படத்தில் லாப்ரடார் வகை நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. கில்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் ஜூலை 3ஆம் தேதி பாலிவுட் உச்ச நட்சத்திரம் சுனில் ஷெட்டி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சூரி ஆகியோர் வெளியிட்டனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் நாய்க்கு நடிகர் சூரி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
'அன்புள்ள கில்லி' படம் குறித்து அதன் இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் கூறியதாவது, " எங்கள் படத்தின் ட்ரெய்லரை ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்த சுனில் ஷெட்டி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சூரி ஆகியோருக்கு படக்குழு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ட்ரெய்லருக்கு தந்த பெரும் ஆதரவு இப்படத்தின் வெற்றி மீதான நம்பிக்கையை பெருமளவில் உயர்த்தி இருக்கிறது. திரையரங்கில் குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக “அன்புள்ள கில்லி” திரைப்படத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.