லண்டன்: இந்திய சினிமாக்களில் நடித்து வந்த பிரபல மாடலும், நடிகையுமான எமி ஜாக்சன் ஆண் குழந்தையை இன்று பெற்றடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் நடிகை எமி ஜாக்சன். இதனைத்தொடர்ந்து காதலனுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
இதையடுத்து தனது கர்ப்ப கால தருணங்கள் ஒவ்வொன்றையும் புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வந்தார் எமி. நிறைமாத கர்ப்பிணியான பின்பு கடந்த மாதம் தனக்கு ஆண் குழந்தை பிறக்கப்போவதாக வித்தியசமான விடியோ மூலம் அறிவித்தார்.
இந்த நிலையில், எமி ஜாக்சன் பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தையை பெற்றெடுத்து தாயாகியுள்ளார். இதனையடுத்து தனது ஆண் குழந்தையின் பசியை போக்கும் விதமாக தாயப்பால் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன்.
![Amy jackson welcomes baby and announced name as Andreas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/amyjacson230919_1c_2309newsroom_1569241153_608.jpg)
அப்போது, அவரது வருங்கால கணவர் ஜார்ஜ், எமியின் நெற்றியில் அன்பு முத்தம் தர, மகிழ்ச்சி பூரிப்புடன் அவர் சிரிக்கிறார்.
மேலும், இந்த உலகுக்கு ஆண்டிராஸை வரவேற்கிறேன் என்று குறிபிட்டுள்ள பதிவிட்டுள்ளார். தனது குழந்தைக்கு ஆண்டிராஸ் எனப் பெயர் வைத்திருப்பதை தற்போதே அறிவித்துள்ளார்.