ETV Bharat / sitara

கிராமத்து வாழ்வியலில் உருவாகும் 'அம்முச்சி சீசன் 2'

கிராமங்களை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் குடியேறிய தமிழர்களின் சொந்த அனுபவத்தை உணர வைக்கும் நிகழ்ச்சியாக உருவாகி வரும் அம்முச்சி சீசன் 2 இணையத்தொடருக்கு மக்களிடத்தில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கிராமத்து வாழ்வியலில் உருவாகும் “அம்முச்சி சீசன் 2”!

author img

By

Published : Jan 20, 2022, 6:15 PM IST

ஓடிடி தளங்களின் வரவில் எண்ணற்ற வலைத்தொடர்கள் வெளிவருகின்றன.

அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்துத் தரப்பிலும் ரசிகர்களைக் கவர்கின்றன. அந்த வகையில் வெளிவந்த 'அம்முச்சி' இணையத் தொடரின் முதல் சீசன் பலரையும் கவர்ந்தது.

'நக்கலைட்ஸ்' என்ற புகழ்பெற்ற யூ-ட்யூப் சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்களை மகிழ்வித்தது.

இப்போது இந்தக்குழு 'அம்முச்சி சீசன் 2' உடன் மீண்டும் வந்துள்ளது. இந்த டிராமா, காமெடி தொடரின் புதிய சீசன் 8 அத்தியாயங்களுடன் 30 நிமிடங்கள் ஓடக்கூடியது.

எதிர்பாராத திருப்பங்கள் உள்ளடக்கம்

கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்ட கதை மாந்தர்கள், குடும்பங்கள், உறவுகள், அவர்களுக்கிடையேயான மோதல்கள் ஆகிய கதைக்கருக்களின் வழியாக இந்தக்கதை பயணிக்கிறது.

ஒரு கண்டிப்பான கிராமப்புற தந்தை மாகாளி, ஒரு ஆடம்பரமான கிராமப்புற வில்லன் மசநாய் மணி, படிப்பின் மீதான உண்மையான ஆர்வம் கொண்ட ஒரு கிராமப்புற பெண், தன்னைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்காகப் போராடும் ஒரு நாயகன் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் பின்னணியில் இந்தக்கதை செல்கிறது.

இந்த திரைக்கதை கிராமப்புற வாழ்க்கை முறை மற்றும் கிராமத்து உணர்ச்சிக் கலவையை யதார்த்தமாக அணுகுவதோடு, ஒவ்வொரு எபிசோடிலும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டு கிராமப்புற வாழ்வை கண்முன் காட்டும்.

வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்வியல்

'அம்முச்சி சீசன் 2' வலைத்தொடரை இயக்குநர் ராஜேஷ் காளிசாமி இயக்கியுள்ளார்.

பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

அருண், சசி, மித்ரா ஆகியோர் முக்கியப் பாத்திரங்களிலும், சின்னமணி டைட்டில் ரோலில் அம்முச்சியாகவும் நடிக்கின்றனர்.

விவேக் சரோ இசையமைப்பாளராகவும், கண்ணன் பாலு படத்தொகுப்பாளராகவும், சந்தோஷ் குமார் ஒளிப்பதிவும் செய்கின்றனர்.

இந்தத்தொடர் கிராமங்களை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் குடியேறிய தமிழர்களின் சொந்த அனுபவத்தை உணர வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த நடிகைக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.