ETV Bharat / sitara

'பிக் பி'-யின் ட்விட்டரை ஹேக் செய்தவர்கள் இந்த நாட்டவர்களா?!

நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு பாகிஸ்தானால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

File pic
author img

By

Published : Jun 11, 2019, 10:19 AM IST

Updated : Jun 11, 2019, 11:32 AM IST

நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அளவில் மிக அதிக அளவு ரசிகர்களை வைத்துள்ள பிரபலங்களில் ஒருவர். இவர் சமூக வலைதளமான, ட்விட்டரில் தன்னைப் பற்றிய செய்திகள், கருத்துக்கள், நாட்டு நடப்புகள், புகைப்படங்கள் போன்றவற்றை அவர் பகிர்ந்து வருகிறார். இவரது ட்விட்டர் கணக்கை 37 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்பற்றிவருகின்றனர்.

இந்நிலையில் அமிதாப்பச்சன் ட்விட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புகைப்படம் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது சில தகவல்களையும் ஹேக்கர்கள் பதிவிட்டனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துருக்கியைச் சேர்ந்த ஆயில்டிஷ் டிம் குழுவினால் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தற்போது அமிதாப் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு இயல்பு நிலைக்கு வந்துள்ளது.

இது குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல நடிகரின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ட்விட்டரில் #amitabhbachchan ட்ரெண்டாகி வருகிறது.

அமிதாப்பச்சனின் ட்விட்டர்

அமிதாப்பச்சன் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகள் பதியப்பட்டு வருகிறது.இந்திய அளவில் இந்த டூவீட் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது

அமிதாப்க்கு பதில் இம்ரான் கானின் profile படங்கள் இடம் பிடித்துள்ளன பாகிஸ்தான் கொடிகளும் பதியப்பட்டுள்ளன
Last Updated : Jun 11, 2019, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.