ETV Bharat / sitara

விஜய்சேதுபதி படத்தில் நடிக்கவிருந்த அமலாபால், ஆடை பட டீசரால் வெளியேறினாரா? - ஆடை

விஜய் சேதுபதியின் புதிய படத்திலிருந்து விலகியது தொடர்பான அறிக்கையை நடிகை அமலாபால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

amalapaul
author img

By

Published : Jun 27, 2019, 1:33 PM IST

Updated : Jun 27, 2019, 3:22 PM IST

இயக்குநர் எஸ். பி. ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய்சேதுபதி நடித்துவரும் 'விஎஸ்பி 33' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு வில்லனாக இயக்குநர் மகிழ்திருமேனி நடிக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு ஜூன் 14ஆம் தேதி பழனியில் தொடங்கியது. சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இந்தப்படத்தில், விஜய்சேதுபதி இசைக் கலைஞனாக நடிக்கிறார். இப்படத்தில் சர்வதேச அளவிலான பிரச்சனைகள் பேசப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, அமலாபால் ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்நிலையில் திடீரென இப்படத்திலிருந்து அமலாபாலை விலக்கிவிட்டு, அவருக்கு பதிலாக நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கால்ஷீட் பிரச்னையால் அமலாபால் விலகியதாக செய்திகள் வெளியாகின.

இப்படத்திலிருந்து அமலாபால் விலகியதற்கான காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், 'நான் விஜய்சேதுபதி 33 படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். தயாரிப்பு தரப்புக்கு நான் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இத்தனை வருடங்களாக என்னுடன் பணியாற்றியவர்கள், மூத்தவர்கள், நட்புகள் யாரும் இதுவரை இதுபோன்ற குற்றச்சாட்டை என் மீது வைத்ததில்லை . நான் எப்போதும் தயாரிப்புத் தரப்புக்கு ஆதரவாகதான் இருந்திருக்கிறேன். உதாரணமாக 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்துக்கு நான் எனது ஒரு பகுதி சம்பளத்தை வாங்கிக்கொள்ளவே இல்லை. அப்போது தயாரிப்பாளர் பணப்பிரச்சனையில் இருந்தபோது அவருக்கு நான் பண உதவியும் செய்துள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'அடுத்து வெளிவர உள்ள 'அதோ அந்தப் பறவை போல' படத்தின் படப்பிடிப்பில் நான் ஒரு எளிமையான வீட்டில் தங்கி நடித்துக் கொடுத்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு - பகலாக நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு சண்டைக் காட்சியில் எனது தசைநார் கிழிந்த பிறகும் அதைப் பொருட்படுத்தாமல் நடிதத்துக் கொடுத்தேன். 'ஆடை' படத்தைப் பெறுத்தவரை குறைந்த சம்பளத்திற்கு நடிக்க ஒப்புக்கொண்டேன். வெறும் முன் பணத்தை பெற்றுக்கொண்டே நடித்துக்கொடுத்துள்ளேன்' என்று அமலாபால் விளக்கமளித்துள்ளார்.

மேலும், 'விஜய்சேதுபதி 33 படத்தின் ஆடைகள் வாங்கி அதற்கான வடிவமைப்பை நானே எனது சொந்த செலவில் செய்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் சந்திரா புரொடக்ஷன் எப்போதும் பட்ஜெட் பற்றி சிந்திப்பவர்கள். ஆகவே எனது செலவுகளை நானே பார்த்துக்கொண்டேன். இந்நிலையில் தீடீரென தயாரிப்பாளர் ரத்தனவேலு குமார் எனக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார். அதில், எனது நிபந்தனைகள் அவர்களுக்கு ஏற்றவாறு இல்லை என்பதால் என்னை இப்படத்திலிருந்து விலக்கியதாக குறிப்பிட்டிருந்தார். இந்த முடிவை அவர் எடுக்கும்முன் என்னிடம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை. அவர்களின் இந்த தீடீர் முடிவு 'ஆடை' படத்தின் டீசர் வெளிவந்த பிறகே எடுத்திருக்கக் கூடும்' என்று தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் இறுதியில், விஜய் சேதுபதி மீது தனக்கு எந்த பிரச்னையும் இல்லை, தற்போதும் நான் அவரது ரசிகை என்று அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:

Amala paul

Conclusion:
Last Updated : Jun 27, 2019, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.