நடிகை அமலா பால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமான ‘அதோ அந்த பறவை போல' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் இயக்குநர் கே.ஆர். வினோத், தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகர் எஸ்.வி. சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குநர் திருமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகை அமலா பால், இந்தப் படம் கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதுதான் படக்குழுவினரின் சிறப்பம்சம் என்றார். இப்படத்திற்காக கிராமகா என்னும் தற்காப்பு கலையை தான் கற்றுக்கொண்டதாக தெரிவித்த அமலா பால், இப்படத்தின் இயக்குநர் வினோத், கதாசிரியர் அருண் எனப் பலரும் படத்திற்காகக் கடினமாக உழைத்தனர் என்றும் அந்த உழைப்புக்கு முன்னால் தன்னுடைய உழைப்பு ஒன்றுமேயில்லை எனவும் கூறினார்.
படத்தில் நடித்த சிறுவன் பிரவீன் தனது நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது பெறுவார் என தான் நினைப்பதாகக் குறிப்பிட்ட அவர், இப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறினார். இப்படத்திற்காக தான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை தனக்கு நிஜ வாழ்க்கையிலும் தைரியத்தை கொடுத்துள்ளது என்றார்.
இதையும் படிங்க: 'த மாயன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட 'AAA' பட இயக்குநர்