சீரியல் மூலம் ரீல் ஜோடியாக அறிமுகமாகி, பின்பு ரியல் ஜோடியாக மாறியவர்கள் ஆல்யா மானசா - சஞ்சீவ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தாள்.
கார்கள் மீது அதிக பிரியம் கொண்ட இவர்கள் தற்போது புதிததாக கியா கார்னிவல் கார் ஒன்றை வாங்கியுள்ளனர். 7 பேர் அமரக்கூடிய இந்த காரின் விலை சுமார் 40 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் அப்போது எடுத்த புகைப்படத்தை ஆல்யா மானசா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த ஜோடி 2019ஆம் ஆண்டு பென்ஸ் கார் வாங்கிய நிலையில் அடுத்த ஆண்டே மினி கூப்பர் காரை மகளின் பிறந்தநாளுக்காக வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பீஸ்ட் அப்டேட் - அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?