ETV Bharat / sitara

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ஆலியா பட் எமோஷனல் பதிவு! - பாலிவுட் செய்திகள்

ஆலியா பட், தான் சொந்தமாக தயாரித்து நடிக்கும் ’டார்லிங்ஸ்’ படத்தின் படப்படிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Alia Bhatt
Alia Bhatt
author img

By

Published : Jul 4, 2021, 1:40 PM IST

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தானே தயாரித்து நடிக்கும் முதல் பாலிவுட் திரைப்படம் ’டார்லிங்ஸ்’.

ஜஸ்மீத் கே ரீன் இயக்கும் இப்படத்தினை ஆலியாவுடன் நடிகர் ஷாருக் கானின் ’ரெட் சில்லீஸ்’ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ஷெஃபாலி ஷா, ரோஷன் மேத்தியூ ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போது கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ’டார்லிங்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

’நான் படபடப்பு நிறைந்த நடிகை’

இந்நிலையில், முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் தான் எடுத்துக்கொண்ட கறுப்பு வெள்ளை புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆலியா, ”இது தயாரிப்பாளராக எனது முதல் படம். ஆனாலும் நான் என்றுமே முதலில் படபடப்பு நிறைந்த நடிகை தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Alia Bhatt
’டார்லிங்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில் ஆலியா பட்

’என்னை வாழ்த்துங்கள்’

ஒவ்வொரு படம் தொடங்கும்போதும் நான் இப்படி தான் உற்சாகமாகவும், படப்படப்பாகவும் உணருவேன். தவறாக டயலாக் பேசுவது குறித்தும், லேட்டாக படப்பிடிப்புக்கு சென்று விடுவோமோ என்ற அச்சத்திலும்தான் படப்பிடிப்பு முந்தைய நாள் இரவு தூங்க செல்வேன். என்னை வாழ்த்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'வாத்தி கம்மிங்' : ரியாலிட்டி ஷோவில் வெறித்தனம் காட்டிய பாலிவுட் பிரபலங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.