சென்னை: நடிகர் அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்து தற்போது வலிமை படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜிப்ரான் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
தற்போது இதன் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இப்படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். நயன்தாரா அஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அனிருத் இசை அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொழில் நகரமான கோவையில் பட்ஜெட் ரியாக்சன் எப்படியிருக்கு! பார்க்கலாம்.. வாங்க!