ஹைதராபாத்: அரசியல் படமாக உருவாகிவரும் 'கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்டுலு' படத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் கேரக்டர் லுக்கை இயக்குநர் ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்.
திரைப்படங்களில் மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் யாரையாவது வம்பிழுக்கும் விதமாக கருத்து தெரிவித்து சிக்கலில் மாட்டிக்கொள்வதை வழக்கமாகக் கொண்ட தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு சர்ச்சை இயக்குநர் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
இவர் அரசியலை களமாக வைத்து 'கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்டுலு' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண், பல நிஜ வாழ்க்கை பிரபலங்களின் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
இதையடுத்து, படத்தின் போஸ்டர் ஒன்றை ராம் கோபால் வர்மா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதில், சர்ச்சையான கதாபாத்திரங்களை வைத்து சர்ச்சை இல்லாத படமாக உருவாகிவரும் கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்டுலு படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 27ஆம் தேதி காலை 9.36 மணிக்கு வெளியிடப்படும். அரசியவாதிகள், பத்திரிகையாளர்கள், ரவுடிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசாக இந்த ட்ரெய்லர் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
On eve of Diwali 27th October.. Trailer release at 9.36 AM ..It is a non controversial film with controversial characters #KRKR pic.twitter.com/E1h8T1EWi0
— Ram Gopal Varma (@RGVzoomin) October 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On eve of Diwali 27th October.. Trailer release at 9.36 AM ..It is a non controversial film with controversial characters #KRKR pic.twitter.com/E1h8T1EWi0
— Ram Gopal Varma (@RGVzoomin) October 23, 2019On eve of Diwali 27th October.. Trailer release at 9.36 AM ..It is a non controversial film with controversial characters #KRKR pic.twitter.com/E1h8T1EWi0
— Ram Gopal Varma (@RGVzoomin) October 23, 2019
மேலும், இந்த போஸ்டரில் காணப்படும் நிஜ வாழ்க்கை பிரபலங்கள் போன்று இருக்கும் கதாபாத்திரங்கள் தற்செயலானதே தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
Some people in this poster resembling some people in real life is purely coincidental and not at all intentional #KRKR pic.twitter.com/VIfPNxKuvR
— Ram Gopal Varma (@RGVzoomin) October 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Some people in this poster resembling some people in real life is purely coincidental and not at all intentional #KRKR pic.twitter.com/VIfPNxKuvR
— Ram Gopal Varma (@RGVzoomin) October 24, 2019Some people in this poster resembling some people in real life is purely coincidental and not at all intentional #KRKR pic.twitter.com/VIfPNxKuvR
— Ram Gopal Varma (@RGVzoomin) October 24, 2019
இதனிடையே ராம் கோபால் வெளியிட்டுள்ள போஸ்டரை ரீ-ட்வீட் செய்துள்ள மலையாள நடிகர் அஜ்மல் அமீர், 'கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்டுலு' படத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த நடிகரான அஜ்மல் அமீர், தமிழில் மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கோ, திருதிரு துறுதுறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், சித்திரம் பேசுதடி 2, தேவி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு மம்முட்டி நடிப்பில் விபத்தில் மறைந்த ஆந்திர முதலமைச்சரான ராஜசேகர ரெட்டி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரான 'யாத்ரா' படம் வெளியானது. இதையடுத்து தற்போது ராஜசேகர ரெட்டி மகனும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் மற்றொரு மலையாள நடிகரான அஜ்மல் அமீர் நடித்துள்ளார்.