ETV Bharat / sitara

'வலிமை' 2ஆவது சிங்கிள் ப்ரோமோ வெளியீடு; ரசிகர்கள் கொண்டாட்டம்!

author img

By

Published : Dec 1, 2021, 10:06 PM IST

வலிமை திரைப்படத்தின் 2ஆவது பாடலுக்கான சிங்கிள் ப்ரோமோ இன்று (டிச.2) வெளியிடப்பட்டதால், நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

'வலிமை' 2-வது சிங்கிள் ப்ரமோ வெளியீடு; ரசிகர்கள் கொண்டாட்டம்!

வினோத் இயக்கத்தில், அஜித்குமார் நடித்துள்ள 'வலிமை' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவுற்று பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படமானது வருகின்ற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்யப்படும் என படத்தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் 'நாங்க வேற மாறி' பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த பாடல் யூ-ட்யூப்பில் 35 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றுள்ளது. பின்னர் வலிமையின் அடுத்த அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ இன்று (டிச.1) வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

மேலும் இதன் முழுப்பாடல் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Yaanai film: 'யானை' ரிலீஸ் தேதி தகவல் கசிவு?; அருண்விஜய் அச்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.