ETV Bharat / sitara

போடுறா வெடிய.. போனிகபூர் வெளியிட்ட 'வலிமை'யான அப்டேட்...!

author img

By

Published : Mar 15, 2021, 3:52 PM IST

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் 'வலிமை' திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

valimai
valimai

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. கரோனா தொற்று அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஆனால் இப்படம் குறித்து நீண்ட நாள்களாக எந்தவித அப்டேட்டும் வராத காரணத்தால் அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் 'வலிமை' அப்டேட் கேட்டுவந்தனர்.

டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, சென்னை மைதானத்தில் வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, சென்னை வந்த பிரதமர் மோடி என பல தரப்பினரிடம் ரசிகர்கள் வலிமை அப்பேட் கேட்க அந்தக் காணொலியும் சமூக வலைதளத்தில் வைரலாகிவந்தது. மதுரை அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு போஸ்டர் ஒட்டினர். ஒரு கட்டத்தில் கடவுள் முருகனிடமே 'வலிமை' அப்டேட் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அளித்தனர். இதனால் கடுப்பான அஜித் அறிக்கை விடும் அளவிற்கு இப்பிரச்னை பெரிதானது.

தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் 'வலிமை' படம் குறித்த முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். அதனை தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளும் அடுத்தடுத்து தொடங்கப்படும்" என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அஜித்தின் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.