பாகுபலி 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கி வரும் படம் 'RRR'. அல்லூரி சீத்தாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் விடுதலை போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிவரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
-
All of us are super charged and ecstatic to kickstart our schedule with @AjayDevgn ji today... Welcome Sir!#AjayDevgn #RRRMovie #RRR pic.twitter.com/9jVnlpdTmY
— RRR Movie (@RRRMovie) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All of us are super charged and ecstatic to kickstart our schedule with @AjayDevgn ji today... Welcome Sir!#AjayDevgn #RRRMovie #RRR pic.twitter.com/9jVnlpdTmY
— RRR Movie (@RRRMovie) January 21, 2020All of us are super charged and ecstatic to kickstart our schedule with @AjayDevgn ji today... Welcome Sir!#AjayDevgn #RRRMovie #RRR pic.twitter.com/9jVnlpdTmY
— RRR Movie (@RRRMovie) January 21, 2020
இதில் அஜய் தேவ்கான், ஆலியா பட்ட் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அஜய் தேவ்கான் 'RRR' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படத்தின் இயக்குநர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் மூலம் முதல் முறையாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்துள்ளதால் டோலிவுட் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தெலுங்கில் கால்பதிக்கும் 'பிங்க்' - டைட்டில், போஸ்டர் வெளியீடு