'தனாஜி' படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மைதான்'. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் இப்படத்தில், சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இதில், அஜய் தேவ்கனுடன் இணைந்து பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இத்திரைப்படம் உருவாகிவருகிறது.
-
‘Maidaan’ now releases worldwide in theatres on Dussehra 2021. Shoot commences January 2021.#Maidaan2021 #Priyamani @raogajraj @BoneyKapoor @iAmitRSharma @ItsAmitTrivedi @freshlimefilms @SaiwynQ @ActorRudranil @writish @saregamaglobal @ZeeStudios_ @ZeeStudiosInt pic.twitter.com/9KwxWP1vle
— Ajay Devgn (@ajaydevgn) December 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">‘Maidaan’ now releases worldwide in theatres on Dussehra 2021. Shoot commences January 2021.#Maidaan2021 #Priyamani @raogajraj @BoneyKapoor @iAmitRSharma @ItsAmitTrivedi @freshlimefilms @SaiwynQ @ActorRudranil @writish @saregamaglobal @ZeeStudios_ @ZeeStudiosInt pic.twitter.com/9KwxWP1vle
— Ajay Devgn (@ajaydevgn) December 12, 2020‘Maidaan’ now releases worldwide in theatres on Dussehra 2021. Shoot commences January 2021.#Maidaan2021 #Priyamani @raogajraj @BoneyKapoor @iAmitRSharma @ItsAmitTrivedi @freshlimefilms @SaiwynQ @ActorRudranil @writish @saregamaglobal @ZeeStudios_ @ZeeStudiosInt pic.twitter.com/9KwxWP1vle
— Ajay Devgn (@ajaydevgn) December 12, 2020
கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி பாதிக்கப்பட்டது. இதனால், இந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி திரைக்குவரும் என படக்குழு அறிவிருந்த நிலையில், இன்று மீண்டும் திரையிட்டு தேதியை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
1951-1962 காலகட்டத்தில் இந்தியாவின் கால்பந்து விளையாட்டை உலக அரங்குக்கு கொண்டுச் செல்ல அயராது பாடுபட்ட சயத் அப்துல், இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். ஆசிரியராக இருந்து கால்பந்து பயிற்சியாளராக தனது பணியை திறம்படச் செய்த இவர், 1956ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் அரையிறுதிவரை போராடி இந்திய அணி அதிகபட்ச சாதனை படைக்க முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர்.