தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து புதிய படத்தில் நடித்துவருகின்றனர். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தினை ஜிஎஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அருள் குமார் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷுடன் பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் குறித்து அருள் குமார் கூறுகையில், எங்கள் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் காண, மிக மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் தனது திறமையான இயக்கத்தின் மூலம், திட்டமிட்ட காலகட்டத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளார்.
இந்தப் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும். இது ஒரு கிரைம் -திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. மன இறுக்கம் கொண்ட குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம்.
எந்தவித கதாபாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றார்.
இதையும் படிங்க: நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்!