'காக்கா முட்டை', 'தர்மதுரை', 'வடசென்னை' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படம் 'கனா'. 2018 டிசம்பர் மாதம் தமிழில் வெளியான இத்திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 'கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி' என்ற பெயரில் உருவாகிவருகிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.
இந்தத் திரைப்படத்தின் டீசரை இன்று மாலை ஐந்து மணிக்கு மெகா ஸ்டார் சீரஞ்சீவி வெளியிடவுள்ளர். இத்தகவலை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.