ETV Bharat / sitara

லட்சுமியின் ‘ஹவுஸ் ஓனரை’ கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்..!

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஆடுகளம் கிஷோர் நடித்துள்ள 'ஹவுஸ் ஓனர்' படத்தை வெளியிடும் உரிமையை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஹவுஸ் ஓனர்
author img

By

Published : May 11, 2019, 8:29 PM IST

Updated : May 11, 2019, 10:20 PM IST

சொல்வதெல்லாம் உண்மை எனும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர், நெருங்கி வா முத்தமிடாதே, ஆரோகணம், அம்மணி போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து, ‘ஹவுஸ் ஓனர்' எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், நடிகையாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக கோலிசோடா படப்புகழ் கிஷோர் நடித்துள்ளார். கதையின் நாயகனாக ஆடுகளம் கிஷோர் நடித்துள்ளார்.

house owner movie
ஹவுஸ் ஓனர்

ஜிப்ரான் இசையில், மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல்களை எழுதியுள்ளனர். மகளிர் மட்டும் புகழ் பிரேம் எடிட்டிங் செய்துள்ளார். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற நடுத்தர வர்க்க நாயகனின் கனவே இப்படம். ‘ஹவுஸ் ஓனர்' படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தை உலகமெங்கும் வெளியிடும் உரிமையை முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது அட்லி-விஜய் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

படம் குறித்து இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், "ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் ஹவுஸ் ஓனர் படத்தை வெளியிடுகிறது. தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன்" என்றார்.

Intro:Body:Conclusion:
Last Updated : May 11, 2019, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.