ETV Bharat / sitara

தொடர் முற்றுகை போராட்டம்: ரஜினி வீட்டிற்கு 3 அடுக்கு பாதுகாப்பு - ரஜினி

சென்னை: பெரியார் குறித்த பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு வலுப்பதால் அவரது வீட்டிற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

security
security
author img

By

Published : Jan 22, 2020, 5:15 PM IST

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தான் ஒருபோதும் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க மாட்டேனென கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவரது வீட்டை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். இரண்டாவது நாளான இன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

  • 'ரஜினியே மதவாத அரசியலுக்கு துணைபோகாதே',
  • 'ஆர்.எஸ்.எஸ்.ஐ சந்தோஷப்படுத்த பெரியாரை சீண்டாதே'

என்று அவர்கள் முழக்கமிட்டனர். பின்னர் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர். அவர்கள் அனைவரையும் செம்மொழி பூங்கா அருகே வழிமறித்து காவல் துறையினர் கைதுசெய்தனர்.

தொடர் முற்றுகை போராட்டம் - ரஜினி வீட்டிற்கு 3 அடுக்கு பாதுகாப்பு

இதனையடுத்து, நாளுக்கு நாள் ரஜினிக்கு எதிர்ப்பு வலுத்துவருவதாலும், பெரியார் அமைப்பினரின் தொடர் போராட்டத்தாலும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு மூன்றடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’ஒரு படமும் ஓடாது, நடவடிக்கைகள் முடக்கப்படும்’ - ரஜினியை எச்சரிக்கும் தி.வி.க.!

Intro:நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புபோலீஸ் பாதுகாப்பு.
Body:2 வது நாளாக இன்று திராவிடர் விடுதலைக் கழக தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் ரஜினி மதவாத அரசியலுக்கு துணைபோகாதே, ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி ரஜனிகாந்த் மன்னிப்பு கேள்,ரஜினியே பார்ப்பனர்களை சந்தோஷப்படுத்த பெரியாரை சீண்டாதே, ரஜினியே வரலாறு தெரியாமல் உளறாதே உள்ளிட்ட பதாகைகளை வைத்து கொண்டு ரஜனிகாந்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். 50-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட பேரணியாக சென்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் செம்மொழி பூங்கா அருகே வழிமறித்து கைது செய்தனர். பின்னர் அனைவரையும் சமூக நலக்கூடங்களில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. Conclusion:பெரியார் அமைப்பினர் தொடர் போராட்டத்தால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.