ETV Bharat / sitara

'ஆதிபுருஷ்'  படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - நடிகர் பிரபாஸ்

நம் நாட்டு இளைஞர்கள் தங்கள் அன்பை 'ஆதிபுருஷ்' படத்தின் மீது பொழிவார்கள் என நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.

author img

By

Published : Aug 18, 2020, 6:57 PM IST

பிரபாஸ்
பிரபாஸ்

டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஷன் குமார், 'தன்ஹாஜி - தி அன்சங்க் வாரியர்' பட இயக்குநர் ஓம் ராவத், ரெட்ரோஃபைல்ஸ் புரொடக்‌ஷன்ஸ், பிரபாஸ் ஆகியோர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகும் 3டி படம் 'ஆதிபுருஷ்'.

தீமையை வெற்றிகொள்ளும் நன்மையை பற்றிய பேசும் ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தை ஓம் ராவத் இயக்குகிறார்.

அற்புதமான ஆக்‌ஷன் செட்களும், கிராபிக்ஸ், நிறைந்த இந்த படத்தில் 'பாகுபலி' மெகா வெற்றிக்கு பிறகு காவிய கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்த படம் இந்தி, தெலுங்கில் படமாகிறது. மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் மிகப்பெரும் பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

இது குறித்து நடிகர் பிரபாஸ் கூறுகையில்,

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சவால் நிறைந்தது, ஆனால் இந்தப்படத்தின் கதாபாத்திரத்தை திரையில் கொண்டுவருவது மிகவும் பெருமைக்குரியது. இயக்குநர் ஓம் விசேஷமாக வடிவமைத்துள்ள இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நம் நாட்டு இளைஞர்கள் தங்கள் அன்பை இப்படத்தின் மீது பொழிவார்கள் என்று உறுதியாக கூறுகிறேன்.

தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறுகையில்,

இப்படம் என் இதயத்துக்கு நெருக்கமானது. நாங்கள் தயாரிக்கும் எல்லா படங்களும் எங்களோடு உணர்வுரீதியாக இணைந்திருக்கின்றன. ஆனால் ஓம் 'ஆதிபுருஷ்' படத்தின் கதையை என்னிடம் கூறும்போது, இந்த கனவு திட்டத்தில் பணியாற்றும் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்று எனக்கு தோன்றியது.

என்னுடைய தந்தை, என் குடும்பத்தினரைப் போல நமது வரலாற்றின் மீதும், புராணங்களின் மீதும் எனக்கும் அதீத நம்பிக்கை உள்ளது. சிறு வயது முதலே அவற்றை கேட்டுத்தான் நாங்கள் வளர்ந்தோம். இந்த பிரமாண்ட படத்தின் நானும் ஒரு அங்கமாக இருக்கப் போகிறேன் என்று எனக்கு தோன்றியது. தாங்கள் நம்பும் ஒரு கதையை பெரிய திரையில் அற்புதமான காட்சிகளுடனும், மகத்துவமான கதாபாத்திரங்களுடனும் காண பார்வையாளர்கள் தயாராக வேண்டும்.

இவர்களைத் தொடர்ந்து படம் குறித்து ஓம் ராவத் கூறுகையில், இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிரபாஸுக்கும், என்னுடைய கனவு திரைப்படத்தை வெளியிட நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கிய பூஷன் அவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மிகப்பெரிய கனவுகளோடும், பெருமிதத்தோடும், இதற்கு முன் பார்த்திராத ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் உறுதியோடும் இந்த பயணத்தை தொடங்குகிறோம்.

'சாஹோ', 'ராதே ஷ்யாம்' படங்களுக்கு பிறகு பூஷன் குமார் பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் 'ஆதிபுருஷ்'. இயக்குநர் ஓம் ராவத்துடன் இணையும் முதல் படம். இந்த மூவர் கூட்டணி வெற்றிக்கான இலக்கணத்தை நிச்சயம் உருவாக்கும்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். 2021ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.