ETV Bharat / sitara

குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்ற அதர்வாவின் சகோதரர் திருமணம்

author img

By

Published : Aug 26, 2020, 8:53 PM IST

நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷுக்கும், தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ மகள் சினேகா பிரிட்டோவுக்கும் திருமணம் நடைபெற்றது.

அதர்வா
அதர்வா

சென்னை: நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷுக்கும், தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ மகள் சினேகா பிரிட்டோவுக்கும் திருமணம் நடைபெற்றது.

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரனான ஆகாஷ், சினேகா பிரிட்டோ என்பவரை கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்துள்ளார். தற்போது, இவர்களின் திருமணம் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்றது. சினேகா பிரிட்டோ ‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளாவார்.

அது மட்டுமில்லாமல் இவர் 'சட்டம் ஒரு இருட்டறை 2' என்னும் படத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் விஜய் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக குடும்ப உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இதுதொடர்பாக அதர்வா முரளி - சேவியர் ப்ரிட்டோ இருவரும் இணைந்து கூறியதாவது, நாங்கள் மனம் நிறைந்த மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் இல்ல திருமண நிகழ்வு அனைவரது ஆசிர்வாதத்தில் நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள் சூழ, இனிதாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வை இன்னும் பிரமாண்டமாக காலத்தால் மறக்க முடியாத, இரு குடும்பங்களின் கொண்டாட்ட நிகழ்வாக உங்கள் எல்லோரையும் அழைத்து நடத்தவே ஆசைப்பட்டோம்.

ஆனால், தற்போதைய உலக சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்ப சொந்தங்கள் மட்டுமே பங்கேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் மிக விரைவில் நிலைமை சரியானவுடனே திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரமாண்ட வரவேற்பு விழா செய்திட திட்டமிட்டுள்ளோம். திருமண பந்தத்தில் இணைந்து பயணிக்கும் எங்கள் இல்ல வாரிசுகளை அனைவரும் ஆசிர்வதிக்க வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.