ETV Bharat / sitara

மகேஷ்பாபு விடுத்த சேலஞ்சை செய்து முடித்த ஸ்ருதிஹாசன்!

author img

By

Published : Aug 12, 2020, 10:39 PM IST

சென்னை: மகேஷ்பாபு விடுத்த பசுமை இந்தியா சவாலை ஸ்ருதிஹாசன் செய்து முடித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டில் செடி நடும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பின் #GreenIndiaChallenge என்ற சேலஞ்ச் மூலம் விஜய், ஜூனியர் என்டிஆர், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார்.

இந்த சவாலை ஏற்ற நடிகர் விஜய் நேற்று (ஆகஸ்ட்.11) தனது வீட்டில் பூச்செடி ஒன்றை நட்டு கிரீன் இந்தியா சவாலை செய்து முடித்தார். அதற்கான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. அதேபோன்று இன்று (ஆகஸ்ட் 12) ஸ்ருதிஹாசன் தனது இல்லத்தில் செடி ஒன்றை நட்டு மகேஷ்பாபு விடுத்த சவாலை தான் நிறைவேற்றி உள்ளதாக புகைப்படம் வெளியிட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதில் அவர் கிரீன் இந்தியா இந்தியா சவாலுக்கு தன்னை பரிந்துரை செய்த மகேஷ்பாபுக்கு நன்றி. கிரீன் இந்தியா சவால் இன்னும் ஒருபடி மேலே செல்வதற்கு நான் நடிகர் ரித்திக் ரோஷன், ராணா டகுபதி, தமன்னா ஆகியோரை பரிந்துரை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.