ETV Bharat / sitara

கார் விபத்து... யாஷிகா ஆனந்த் தந்த எச்சரிக்கை! - கார் விபத்தில் யாஷிகா ஆனந்த்

சென்னை: மனிதாபிமான அடிப்படையில் உதவுவதற்காக என் காரிலிருந்த நான் வெளியேறினேன். ஆனால் நான் விபத்து ஏற்படுத்தியதுபோல் செய்திகள் வந்தன. இதை கண்டிப்பதுடன் தவறான செய்தியை வெளியிட்டு என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் அவதூறு வழக்கு தொடர்வேன் என்று நடிகை யாஷிகா ஆனந்த் எச்சரித்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த்
author img

By

Published : Oct 7, 2019, 1:54 PM IST

தமிழில் சில படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நன்கு பிரபலமானார். இதையடுத்து இவர் தனது நண்பர்களுடன் சென்ற கார் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் சென்றுகொண்டிருக்கையில் பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய விலையுயர்ந்த காரில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும், விபத்துக்குப் பின் யாஷிகா அங்கிருந்த கிளம்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கார் விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை யாஷிகா, எனது நண்பர்கள் சென்ற கார்தான் விபத்தில் சிக்கியது. நான் வேறொரு காரில் வந்தேன்.

விபத்து ஏற்பட்டவுடன் என்னாவாயிற்று என்று மனிதாபிமான அடிப்படையில் உதவுவதற்காக என் காரிலிருந்த நான் வெளியேறினேன். பின்னர் அங்கிருந்து சென்றேன். ஆனால் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்விதமாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

அவை அனைத்தும் வதந்தியே. இதுபோன்ற அடிப்படை உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டால் அவதூறு வழக்கும் தொடர்வேன் என்று எச்சரித்துள்ளார்.

Intro:Body:

கார் விபத்து....யாஷிகா ஆனந்த் தந்த எச்சரிக்கை

மனிதாபிமான அடிப்படையில் உதவுவதற்காக என காரிலிருந்த நான் வெளியேறினேன். ஆனால் நான் விபத்து ஏற்படுத்தியதுபோல் செய்திகள் வந்தன. இதை கண்டிப்பதுடன் தவறான செய்தியை வெளியிட்ட என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் எச்சரித்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.