பாலிவுட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் 'அந்தாதுன்'. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் தேசிய விருதையும் பெற்றது.
தற்போது இப்படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான தியாகராஜன் தமிழில் 'அந்தகன்' என்னும் பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இதில், பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகிபாபு, வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. ஆனால் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் 'அந்தகன்' படத்தின் தனது காட்சிக்கான டப்பிங் பணியை தற்போது தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு வனிதா கூறிய அறிவுரை!